பக்கம்:அவள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்த பால் 263

கொண்டு! அவள்பாட்டுக்குப் போவாள். வருவாள். எங்கு போனாய், ஏன் போனாய், எப்போ திரும்புவாய்-கேட்க மாட்டார். பாஸ்கர் சுபாவம் அப்படி. அவளும் தானாக, போன வந்த விவரங்களைச் சொல்லமாட்டாள். தேவையில்லை. அனேகமாக இன்றைய எல்லாக் குடும்பங்களும் இப்படித்தானே நடக்கின்றன? அதில்கூடப் புதுமை ஏது?

ரேணு ரோசத்தைப்பற்றி அல்லவா கேள்வி அநேகமாகக் கேள்விக்குப் பதில் 'ப்ளாங்கி'தான், அண்டைவீட்டு எதிர் வீட்டு சகவாசம் என்று ரேணு கொண்டாடுவகில்லை. அவளைத் தேடி வரும்படியாகவும் வைத்துக் கொள்வதில்லை. தனி ஜீவி? கிட்டத்தட்ட அப்படித்தான். மழுங்குணி மாங்கட்டை? அழுத்தக்காரி? ஆபத்தான கேள்வி. என்னைக் கேட்டால் நமக்கேன் பாடு என்று இருந்தாளா? இருக்கலாம். நமக்கேன் பாடு என்பதே நடைமுறைத் தத்துவமாக இந்நாளில் விளங்குகிறது.

ஒருநாள் வாடிக்கை பால்காரக் கிழவன் (எருமைப் பால்) வந்தான். 'சாமி, இன்னிக்கு சாயந்திரம் பசுமாடு வீட்டுக்குக் கொண்டுவந்து கறக்கறேன். ஒருவேளைதான். வாடிக்கைக்கார சேட் பம்பாய் போயிருக்கார். நாளை ப்ளேனில் திரும்பிவிடுவார். இஷ்டமா? ஒரு வேளை தான்.'

கிடைத்தவரை லாபம்.

"பரவாயில்லை. ஒண்ணரை லிட்டர் கறக்கும் ஜாதி மாடு, பால் தடிப்புத்தன்."

வீட்டு வாசலில் ஒரு மூலையில் எருமை மாட்டைக் கிழவன் கறக்கிறான். அது தினப்படி வீட்டுச் செலவுக்கு. ரேணு பாத்திரத்துடன் அவன் எதிரே நிற்கிறாள்.

மறுகோடியில் பாஸ்கர் ஒரு எவர்சில்வர் தூக்குடன். (கொஞ்சம் பெரிய தூக்குதான்) கறவல் அத்தனையும் அப்படியே வாங்கிக்கொள்வதாகப் பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/307&oldid=1497854" இலிருந்து மீள்விக்கப்பட்டது