264லா. ச. ராமாமிருதம்
பால் நுரையோடு, குவளையில் உயர்ந்துகொண்டே வருவதைப் பார்க்கிறார். நுரை துளும்புகிறது. கொஞ்சம் குவளையினின்று தப்பி, காற்றில் அலைந்து பறக்கிறது. நன்றாய்ந்தானிருக்கும் போலிருக்கு.
-சேட் நாளைக்கும் பம்பாயிலேயே தங்கிவிட்டால் எவ்வளவு நன்னாயிருக்கும்!"
--சேட் பம்பாயிலேயே தங்கிவிடக்கூடாதா?
பாஸ்கர் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டார். எத்தனை வயதானால் என்ன? மனிதனைச் சுரண்டினால் அடியில் சிறுபிள்ளைத்தனம் தான்!
'ஆ கறந்த பால் தேடற ஐயாவா? அது நீங்க தானா? வேறு யாரோன்ன்ா பார்த்தேன்!"
பாஸ்கர் பதில் பேசவில்லை. அவருக்கு வழக்கம் கிடையாது. கிழவன் பிள்ளை fullஆ போட்டிருக்கிறான். பாஸ்கர் எப்பவுமே அனாவசியமாக வாயைக் கொடுக்க மாட்டார். அவருடன் சம்பாஷணை அநேகமாக ஒரு தலையாகத்தான் அமையும். அதற்குக்கூட ஒரு knack வேணுமில்லே?
"ஐயாகிட்டே ஒண்ணு சொல்லுணும்னு ரொம்ப நாளா எனக்கு எண்ணம். என் அப்பன் எதிரே இருக்கான். இருந்தாலும் சொல்றேன். நான் நல்லா போட்டிருக்கேன். எனக்குத் தெரியும். ஆனால் நான் போட்டிருக்கப்பத்தான் நான் சொல்ல நினைச்சதைச் சொல்ல முடியும். ஐயா, உலகத்திலே கறந்த பாலே கிடையாது. அடிச்சு சொல்றேன். கடவுளுக்கே அந்த எண்ணம் கிடையாது. அம்மா, நீ என்ன சொல்றே?"
ரேணு முகம் வெளுத்து, சிவந்து, நீலமாகி, மறுபடியும் வெளுத்து, இதென்ன டெக்னி கலர்-பாஸ்கருக்கு வியப்பு.
'ஐயா கறந்த பால்னா என்ன தெரியுமா? ஏமாந்தாங்கொள்ளி.”