கறந்த பால் 255
அவளுடைய நெற்றி நரம்புகளில் பச்சைக்கொடி ஒடிற்று. விழிகளில் ஏன் அப்படி ஒரு திகில்?
'அம்மா , நாளைக்கு வெள்ளிக்கிழமை இல்லே?"
அவள் விழிகள் வெளியில் பிதுங்கிவிடும் போல் ஆகி. விட்டன.
'அம்மா நாகம்மா என் உடன் பிறந்தா...'
புதிர் மேல் புதிர். ரேணுவுக்கு திடீர் களைப்பில் விழிகள் செருகின. சட்டென உள்ளே போய்விட்டாள். கிழவன் பாதி கறவலினின்று வெடுக்கென எழுந்து வந்து அணை கயிற்றினாலேயே பையனை வீறுவீறு என்று வீறினான்--'அடி செருப்பாலே; ஸுவர். உன்னை எவன் விளக்கம் கேட்டான்? - -
பையன் வைதுகொண்டே எழுந்து ஓடினான். குவளை அப்படியே தரையில் உருண்டது.
'டேய் ராத்திரி நீ வீட்டுக்கு வரமாட்டே? அரிவாளோடு காத்திட்டிருக்கேன், வா.'
கிழவன் ஒல்லி. மூச்சு இரைத்தது. வயிறு முதுகோடு ஒட்டித் துருத்தி வாங்கிற்று.
பூமியில் பால் தேசப்படம் வரைந்து இன்னும் விரிந்து கொண்டே போயிற்று.
-"முழுத் தூய்மையான பண்டம் யாருக்குமே கிடையாது என்று ஆண்டவன் விதியோ?
'உன் முயற்சிகளை என்னிடம் கொண்டுவா. உன் முயற்சிகளில் நீ தோல்வியுற்றால் உன் தோல்வியை என்னிடம் கொண்டுவா."
-இது கீதையினின்று ஒரு வாக்யம். ஆங்கில மொழி பெயர்ப்பினின்று பாஸ்கருடைய மனதில் சொந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு. கீதையுடன் அவருக்கு இன்னும் அதிக பழக்கமில்லை. ஆனால் இந்த அடி இப்போது தோன்றுவானேன்.