பக்கம்:அவள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்த பால் 267

உள்ளே திரும்பிவிட்ட பார்வைக்கு அவளுக்கு என்ன தெரிகிறது? இல்லாவிட்டால் ஏன் இந்த அற்புதமான புன்னகை மந்தஹாசினி.

அவள் கட்டை விரல் ஊசி முனையை அழுத்திக் கொண்டிருக்கிறது, பாஸ்கர் குனிந்து உற்று நோக்கினார். இன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்த விக்ரஹத்தைச் செதுக்கிய சிற்பியே ஒரு அவதார புருஷனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எவ்வளவு சன்னமான ஊசி! ஆனால் என்ன திடம்? தேவியை அவள் தவத்தில் அவளைத் துரங்கவிடாமல் ஸதாதவத்தில், தவமெனும் தெருப்பில் அவளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்போது ஊசி முனை அவள் தவ உலகத்தையே தாங்குமெனில், நம் கவலைகள் எவ்வளவு அற்பம்? அவளிடம் கொண்டுபோய் வைப்பதற்கே லாயக்கில்லை. -

மறுநாள் ஆபீசிலிருந்து பாஸ்கர் திரும்புகையில் ரேணு வாசலில் காத்திருந்தாள். வாசற்கதவு பூட்டியிருந்த சாவியை அவரிடம் கொடுத்தாள். இதுவும் அவர்களிடையே புதுசு.

'வாங்கோ போகலாம்.

'எங்கே? ஏன்? கேட்க மாட்டார்.

இருவரும் நடந்தனர்.

யாரேனும் கவனித்திருக்கிறீர்களா? சில சமயங்களில் பார்வைக்கு ஒரு திடீர் பளிங்கு ஏற்படுகிறது. அல்லது அப்படித் தோன்றுகிறது. அதில் அதுவரை பலகால விஷயாதிகள் ஒரு புது பரிமாண அர்த்தத்தை, தோற்றத்தைக்கூட அடைகின்றன. ஆச்சர்யமாயில்லை? இதுவரை எப்படி இதற்கு நான் குருடாக இருந்தேன்?

இவள் முகத்தில் எப்படி இயற்கையே துடைத்து விட்டாற்போல் இந்த அதிசுத்தம்? அவள் கூந்தலைக் கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள். பொய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/311&oldid=1497860" இலிருந்து மீள்விக்கப்பட்டது