தாய் 255
சுப்ரமண்யர், விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, அப்பா, அம்மா, பிள்ளை, நாம் பழக்கப்பட்ட சமுதாய உறவுப்படிதான், ஆரம்பத்தில், நாம் தெய்வத்தையும் அணுக முடியும்.
சர்வேஸ்வரனே, இரு கைகளையும் ஏந்திக்கொண்டு நிற்க, தேவி அன்னபூரணி, உட்கார்ந்தபடி அகப்பையில் ஆண்டவனுக்குப் பிச்சையிடும் ஒவியத்தைப் பிராபல்யமாகப் பார்த்திருப்பீர்கள். அம்மாவின் மாதாஸ்வரூபம் அழுத்தமாக இங்கு காண்பிக்கப்படுகிறது. - .
இங்கு ஒன்று சொல்கிறேன்; என் பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன். அவர்கள் எனக்கு ஒரு ஆத்மிக அனுபவம்.
இதோ பாருங்கள், பாரதி, நம் நாட்டின் பெருமையைச் சொல்ல ஆரம்பிக்கும் விதத்தை!
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி யிருந்ததும் இந்நாடே
அவர்கள் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே...
ஆணும் பெண்ணுமாய் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் என்று சொல்லவில்லை. முதல் அடியிலேயே 'எந்தையும் தாயும் என்று பெற்றோரை நெஞ்சில் பதித்து விட்டான். முந்தையர் ஆயிரம் ஆண்டாய் வழிவழி வந்தது இந்த தாய், தகப்பன், குழந்தை எனும் த்ரிமூர்த்தம் தான். மீண்டும் மீண்டும் எந்தையும் தாயும் நானும்தான் தோன்றி, மறைந்து, தோன்றிக் கொண்டிருக்கிறோம். குடும்பம் எனும் ஸ்தாபனம் வேறெதுவாய் இருக்க முடியும்?
அ.-18