பக்கம்:அவள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274லா. ச. ராமாமிருதம்



அவர்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணமாய் வளர்ந்து, அவர்களை மகிழ்வித்து, அவர்கள் மனதை அடைத்துக் கொண்டு எது இருக்க முடியும்?

மகன்தான்,

சமுதாயத்தில் கூட்டுக் குடும்பம், ஏன், குடும்பம் என்கிற ஸ்தாபனம் உடைந்து போயாயிற்று. புருஷன், மனைவிக்கு அவரவர் தனித்தனி ஜோலியில், சுயநலத்தில், பணம் சேமிக்கும், அல்ல சம்பாதிக்கும் தீவிரத்தில், பிறந்துவிட்ட குழந்தைமேல் பா சம் பொழியவோ, அடிப்படையான கவனத்தைத் தரவோ அவர்களுக்கு நேரமில்லை, நாளடைவில் எண்ணமுமில்லை.

பாரதி சொல்லிய நாட்டுப் பற்று தொட்டிலில்கூட இல்லை. தாயின் மார்ச்சுரப்பில்தான்!

ஆகவே, அம்மா எனும் மந்திரச் சொல்லில் அந்த ப்ரத்யக்ஷ தெய்வத்தின் அஞ்சலியில் நாளைத் தொடங்குவோமாக!

அம்மா!

-வானொலிப் பேச்சு-சான்றோர் சிந்தனை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/318&oldid=1497894" இலிருந்து மீள்விக்கப்பட்டது