அன்புள்ள ஸ்நேகிதிக்கு...
அமலி, ஐ லவ்யு. உனக்குத் தெரியாது. ஐ ஹேவ் ஆல்வேஸ் லவ்டு யு.
ஸுனோ இதை என் தோளில் பின்னாலிருந்து படிக்கிறதென்றால் படிக்கட்டும். ஐ டோன்ட் கேர். அவளும் ரகளை மாதிரி ஜுல் காட்டுவாளே ஒழிய, வழி ஆல்லோ டஸின்ட் கேர். எனக்குத் தெரியும் வி டோன்ட் கேர். ஏதோ சின்டாக்ஸ் படிப்பதுபோல் தமாஷா இல்லை?
அன்புள்ள ஸ்நேகிதிக்கு, நீ எனக்கு வெறும் ஸ்நேகிதி தானா? ஆனால் வேறு எப்படி ஆரம்பிப்பது? 'மை டியர் லவ்" என்றே தொடங்கலாம். ஆனால் நம்மிடையில் சாரங்களை முழுக்கத் தட்டியாகவில்லை. தவிர இந்தத் தலைப்பில் கதிரில் ஒரு கதை படித்தேன். ஆகவே ஆரம்பம் சம்பிரதாயமாகவே இருக்கட்டும்.
அன்று ஆஸ்பத்திரியில் கண் ஆப்பரேஷன் ஆகியிருந்த என் சிநேகிதனைப் பார்க்கச் சென்ற இடத்தில் நர்ஸ் யூனிபாரத்தில் உன்னைக் கண்டபோது அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா? உன் கருவிழியுள் சிறுவிழி சட்டென கண்ட சுருக்கத்தில், உன் கன்னங்களில் ஏறிய முலாமில் நீயும் என்னை அடையாளம் கண்டு கொண்டாய் என்று கண்டேன். ஆனால் அதை நீ வெளியே காட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை.