பக்கம்:அவள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்புள்ள ஸ்நேகிதிக்கு 281

'எனக்கு இஷ்டமில்லை."

"ஏனாம்?"

"சகுனம் சரியில்லை."

"இதற்கெல்லாம் சகுனம் பார்க்கவேண்டியவன் நான் அல்லவா?"

"மிஸ்டர்—இன்றுகூட எனக்கு உங்கள் பெயர் தெரியாது அல்லவா? நாலு காசு மலிவுக்கு ஆசைப்படாதீர்கள். சனியன் பிடித்த கட்டில் நான் ஏதேனும் ஆஸ்பத்ரிக்கு—"

"ஒ... ப்ளீஸ்...ப்ளீஸ்...”

"நோ உங்களுக்குக் கட்டில் கிடையாது.”

"ஒ... ப்ளீஸ்..."

"என் நேரத்தை வீணாக்காதீர்கள். குட்பை."

வாசற்கதவை சாற்றக்கூட கவலைப்படாமல் விர்ரென்று மாடியேறிப் போய்விட்டாய்.

டீப்பாயில் இன்னொரு காபி ஏடு புடைக்க ஆரம்பித்துவிட்டது.

காதல் என்பது சாம்பலா? அல்லது அதனுள் மறைந்துகொண்டிருக்கும் தணலா?

அறியாமல் சாம்பலை அள்ளிவிட்டு உள்ளங்கையில் சுறீல்!

அல்லது இரண்டுமேயா?

அல்லது பூமிக்குள் புதைத்து வைத்த ஸ்புடமா?

என் உள்ளேயே நீ புகுந்துவிட்டாய் என்று எனக்கு அப்போது நிச்சயமாய்த் தெரியாது.

தகி தகி தகி—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/325&oldid=1497738" இலிருந்து மீள்விக்கப்பட்டது