பக்கம்:அவள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284 லா. ச. ராமாமிருதம்

இதுபோல இன்னும் எதையுமே விட்டுக்கோடுக்காமல் சின்னதும் பெரிதும் சம்பந்தமும் அற்றதுமாய் தத்துவங்கள், அழகுகள், பேத்தல்கள்—

ஒன்று சந்தேகமில்லை. நீ அசடு இல்லை. நாம் பாரில் இருந்து வெளிவந்த பொழுது இரவே வந்துவிட்டது முற்றிய இரவு.

பூந்தமல்லி ரோடில் கார்கள் பறந்தன.

வெளிச்சங்கள் பிறந்தன. சிரித்தன.

உன் வீடு அங்கே பக்கம்தான். வீட்டுக் கதவுப் பூட்டை சாவி போட்டுத் திறந்தாய். ஏன் வீட்டில் ஒருவருமில்லையா? நீ ஒண்டிதானா ராஜாங்கி! உள்ளே ஏற்கனவே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நீ என் பக்கம் திரும்பினாய். உன் விழிகள் கருந் திராட்ஷைகளாய்ப் பளபளத்தன. என் தோள்மேல் கை வைத்தாய்.

தோள் குமிழியை உன் விரல்கள் பிசைந்தன.

மாடிக்குப் போவோமா?" உன் குரல் மூச்சாய், அடங்கிய செவியில் மோதிற்று. '

கட்டிலைப் பார்க்கிறீர்களா?”

"நான்...நான்...”

மூச்சுத் திணறிற்று. நான் இதுவரை ஸுனோவிற்கு துரோகம் செய்ததில்லை" சிரித்தாய். "ஆஹா! ஸோ நோ gutts, உங்கள் ஸுனோவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.” என் மார்மேல் கை வைத்து என்னை வெளியே தள்ளினாய். கதவு படிரென்று என்மேல் மூடிற்று.

காதல் என்பது புற்றுநோயா புற்று மண்ணா? உள்ளே பாம்பு பழமை ஆக ஆக குழல் விட்டுக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/328&oldid=1497741" இலிருந்து மீள்விக்கப்பட்டது