அன்புள்ள ஸ்நேகிதிக்கு 285
படரும் உயரும் புற்று, அல்லது பாம்பு. அதை விட்டுப் போன பின்னர் அதன் மேலிட்ட மஞ்சளிலும் குங்குமத்திலும் ஆளை மிரட்டிக்கொண்டிருக்கும் ஐதீகமா?
ஸுனோவிற்கும் எனக்கும் இடையே எங்கள் உண்மை ஒவ்வொரு தோலாய் உரிய உரிய உன் இடம் என்னிடம் வலுவாகிக்கொண்டே வந்துவிட்டது.
ஓரொரு சமயத்தில் நீ வீணை வாசிப்பதுபோவவும், ஒரு ரோஜாப் பூவினை முகர்ந்துகொண்டு என்னைப் பார்த்துச் சிரிப்பது போலவும் இதுபோல ஏதேதோ பாவனைகள் மனம் அதன் பேதமையில் ஜோடனை செய்து பார்த்து மகிழ்ந்து அல்லது வேதனையுறும் அலங்காரங்கள். ஆனால் உன்னை நான் பார்க்கும் ஃபேவரட் போஸ் இதுதான். எதுகுல காம்போதியில் முசிறி ரிக்கார்ட்,
கடைசியாக அதில் ஒரு அடி வருகிறது,
ராஜாாஜ ராகவ பிரபோ தியாகராஜ அர்ச்சிதப் பிரபோ
இரு கைகளையும் சிரம்மேல் குவித்து உன்னை மறந்து ஒரு காலில் நிற்கிறாய்.
அம்பாள் தபஸ் இருக்கிறாள்.
ஹே. இதய கமலவாசா! கவுரவர் சபையில் துச்சாதனன் துகிலுரிய கண்ணை மூடிவிட்ட த்ரெளபதி!
சமுதாயத்தைச் சீறும் அபினகாளி!
அமலி ஸரிமபநிஸா.
✽✽✽
மறுபடி எப்போ அமலி? ஆ. இரண்டு மாதங்களுக்குப் பிறகு வுட்லாண்ட்ஸ் கார்டன் ரெஸ்டாரண்ட்.