288 லா. ச. ராமாமிருதம்
தரையில் விரிக்கத் துண்டும் கிடையாது. வெறும் தரை. கட்டாந் தரை. கீழே பூமி. மேலே ஆகாசம். வேறென்ன வேண்டும் இனி நமக்கு?
காதல் என்பது இதயத்தில் தானே ஏற்றிக்கொண்ட அகல் சுடரோ?
ஒரு முடிவுக்கு வந்துதான் இதை எழுதுகிறேன். இன்று என்ன கிழமை? இன்று எட்டாம் நாள் வருகிற வியாழன் மாலை ஐந்தி லிருந்து பழவந்தாங்கல் ஸ்டேஷனில் தாம்பரம் திக்கில் உனக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நீ ஒரு பெட்டிகூட எடுத்து வரவேண்டாம். உன் நர்ஸ் யூனிபாரம் போதும், சட்டென்று உன்னை அடையாளம் கண்டுபிடித்துக் கொள்ள.
"தோ பார் அமலி, உன்னோடு வாழ்க்கையில் உடனே சொர்க்கத்தின் கதவுகள் திறந்து காத்திருக்கும் என்று தான் நினைக்கவில்லை. நினைக்கமாட்டேன். வேஷங்கள் இல்லாமல் உண்மையேனும் சற்று தலை தூக்குமல்லவா? தாம்பரம் போய் அங்கு ஏதேனும் ஒரு தூரப் பிரயாண வண்டியைப் பிடித்துவிடுவோம். எங்கேனும் ஒரு காட்டுப் பிரதேசத்தில் யாருக்கும் காணாமல் மறைந்துவிடுவோம். நம் இருவருக்கும் தவிர.
ஆம். உனக்கு நான் எனக்கு நீ துணை என்று கடைசியாகத் தெளியும் தோழமைதான் காதலின் உண்மை ஸ்வரூபமோ?
இத்தத் தப்பியோடும் பிஸினஸில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது எனக்குத் தெரியும். ஆனால் கூடவே கொஞ்சம் ரொமான்சும் இருக்கிறது. இருந்தால் ஆகாதா?
நீ அப்படிப் பழவந்தாங்கல் ஸ்டேஷனில் இறங்கா விட்டால், வராவிட்டால் என் கடிதம் உன்னிடம் சேரவில்லை. மற்றொரு முறை நாளைக்கு இதே இடத்தில்,