பக்கம்:அவள்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்புள்ளஸ்நேகிதிக்கு 289


என்றெல்லாம் என்னை ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். இதற்கெல்லாம் மறு சான்ஸ் கிடையாது. எனக்குத் தெரியும்.

காதல் மிக மிக ரோஷமுள்ளது. சிகரெட் துண்டை குதிகாலில் தேய்த்து நசுக்குவதுபோல் உன் நினைவை அறவே ஒழித்துவிட வேண்டியதுதான். இருக்கவே இருக்கிறாள். மீண்டும் ஸுனோ.

ஆனால் அப்படி முடியுமோ அமலி?

நான் காத்திருப்பேன்.

ஐ லவ் யு அமலி. உனக்குத் தெரியும் ஐ ஹேவ் ஆல்வேஸ் லவ்ட்யு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/333&oldid=1497769" இலிருந்து மீள்விக்கப்பட்டது