பக்கம்:அவள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

து ள சி


 பாட்டி நம்ம ஜாதியில் உனக்குக் கல்லறை கட்டுவதாயிருந்தால் தினம் மலர்கள் கொண்டுவந்து வணங்கியிருப்பேன். ஆனால் உன்னை சுட்டெரித்து விட்டார்களே! அப்படியும் நான் சின்னப்பையன். உன் செல்லப் பேரன் கண்ணா கள்ளபிரான். அடுத்த நாள் ஹஸ்தி பொறுக்கையில் உன் எலும்பு ஒன்றைத் திருடி நிஜார் பையில் போட்டுக்கொண்டு விட்டேன். தட்டையாய் தகடுமாதிரி அதை அன்று மாலை மாந்தோப்பில் ஒரு மரத்தடியில் புதைத்துவிட்டேன். நாளாகி நான் சம்பாதிக்கும்போது, அங்கு ஒரு சின்னக்கட்டிடம் கட்டுவேன்.

பரவாயில்லே எனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க மூணு பேராண்டிகள் இருக்கான்னு பாட்டி அப்பவே எப்பவோ சொல்லுவே. ஆனால் அதுக்கு அர்த்தம் எனக்கு முந்தாநேத்துதான் தெரிஞ்சது. ஆனால் நாலடி நடந்ததுமே பந்தம் அனைஞ்சுபோச்சு. தூக்கி எறிய சொல்லிட்டா. கடைசி வரைக்கும் நெய் கட்டுப்படி ஆகலையோ என்னவோ நாங்க உன்னோட வரத்துக்கும் மறுத்துட்டா. (பெரியவாளே இப்படித்தானே)

நீ கிளம்பினப்போ ஏதோ தேர்த்திருநாள் மாதிரிதான் ருந்தது. தெரு பூரா ரெண்டு பக்கத்து வீடுலேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/334&oldid=1497777" இலிருந்து மீள்விக்கப்பட்டது