292 லா. ச. ராமாமிருதம்
பாட்டி! உன்னைத் தொட்டால் மெத்து மெத்துன்னு பஞ்சு மிட்டாயாட்டம் இருக்கு, அதிரச விள்ளல மாதிரி. தெவசம்னா ஒரே ஜாலி. முதல் நாளே ஊரிலேருந்தெல்லாரும் வந்துடறா. சித்தப்பா, பெரியப்பா, அத்தை, அவா அவா பொண்ணு பிள்ளைகள். ராத்திரி இட்டிலி. அரிசி, உப்புமா. அந்தக் கூட்டமும் பேச்சும், சிரிப்பும், விளையாட எனக்கு என் வயசுப் பசங்க. அடுத்த நாள் பெரிய்ய கச்சட்டி நிறைய பழேது. தொட்டுக்கக் கீரைக் குழம்பு, சுத்திவர எங்களை உட்கார்த்தி வெச்சு நீ கையிலே போடுவையே. முன்பிடிக்கு பின்பிடி துணைன்னு நாங்களும் போட்டி போட்டுண்டு சாப்பிடுவோம். கடைசியில, அடிக்குழம்பு ஆனைக்குட்டி யாருக்கு? எனக்குத்தான். செல்லப்பேரன் கண்ணன் இல்லையா? நீ வேணுன்னு பண்ணாட்டாலும் ரவுண்டுல முறை அப்படித்தான் வரும். தினமே திவசமாயிருந்தா எப்படியிருக்கும்னு நான் சொன்னபோது அம்மா என் தலையில அடிச்சா. நீ கோச்சுண்டே. என்னடி குழந்தைக்கு என்ன தெரியும்?"
பாட்டி என்னிக்குமே நாம ரெண்டுபேரும் ஒரே கட்சிதான்.
'பாட்டி, பாட்டி, உன் எலும்பை பொதைச்ச இடத்துல ஒரு செடி முளைச்சிருக்கு!...
துளசி,
நீ துளசி பாட்டியாமே!
உன் பேரையே நான் இப்பத்தான் தெரிஞ்சுண்டேன்.
பாட்டி எனக்குத் தெரியும். நீ எங்கேயும் போகலை.
நீ எங்கே போவே?
✽✽✽
பாட்டி செடியாக நீ வளர, வயசாக நான் வளர எண்ணம் பின்னோக்கிப் போகிறது. ஊஞ்சல் ஆட்டம் மாதிரி. கடிகாரப் பெண்டுலம் மாதிரி. ரொம்ப சீக்கிரம்