xxxiv
சீயக்காயின் சுகந்தத்தில துலங்குகிறாள்-என் இதயத்தின் துலக்கமே(The clean sing of my heart)
பாலாபிஷேகத்தில் புலுபுலு புஷ்பமாய் மிளிர்கிறாள். பெரிய புஷ்பம்!- என் இதயத்தின் அமுதமே! (The milk of my heart!)
தயிர் அபிஷேகத்தில் (யாரிடமும்) மறைந்திருக்கும் ஒரு முரட்டுத்தனத்தை வெளிக்காட்டுவதுபோல் தோன்றுகிறாள் - என் இதயத்தின் ததியே! (The curd of my heart!)
இளநீர் அபிஷேகத்தில், மர்மத்தின் ஸல்லாவில் லேசாக மங்கித் தெரிகிறாள். என் இதயத்தின் மர்மமே! (My Princess, versed in my story!)
பன்னீர் அபிஷேகத்தில் பரிமளிக்கிறாள். என் என் இதயத்தின் பரிமளமே! (The perfume of my heart!)
பஞ்சாமிர்தத்தில் மதமதக்கிறாள். என் இதயத்தின் பஞ்சாமிர்தமே! (The Yojuptiens fruits of my heart)
தேன் அபிஷேகத்தில் விட்டு விட்டு ஒளி வீசுகிறாள். என் இதயத்தின் தேனே! (The honey of my heart!)
மஞ்சள் அபிஷேகத்தில் மங்கலம் வீசுகிறாள். என் இதயத்தின் மங்கலமே! (My heart's propixiousness!)
சந்தனாபிஷேகத்தில், சந்தனத்திலே ஸே உடுத்தி, தோரணை, தபாக்னி, உடனே சாந்தம், மயக்கு, துய்மையின் கலவையில் ஜ்வலிக்கிறாள். என் இதயத்தின் சந்தனமே! (The sandal of my heart!)
[என் முதல் காதல் ஆங்கிலத்திலும் அர்ச்சிக்கிறேனே! மறு சமயம் உண்டோ இல்லையோ?]
அவ்வப்போது உபசாரமாய்க் காட்டும் கற்பூரத்தின் சுடரொளியில் அவள் புன்னகையில் வெற்றியும் கருணையும் ப்ரகாசிக்கின்றன. என் இதயத்தின் சுடரே (The flame of my heart!)