பக்கம்:அவள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துளசி 297

பாட்டி, உனக்குத் தெரியாததில்லை. உனக்கு நேராததில்லை. பாட்டி நீ சமுத்திரம். உனக்கு காதல் நேர்ந்திருக்கோ? நேர்ந்திருக்கோன்னுதான் கேட்கிறேன். பண்ணிருக்கையான்னு கேட்கலை. அந்தக் காலத்தில் பண்ணுவதேது?

அந்தவரைக்கும் இப்ப காலம் மாறிப்போச்சு பாட்டி, அடேயப்பா இப்ப இதுகளுக்கெல்லாம் இருக்கும் துணிச்சல்...பெரியவர்கள் நிஜமாவே பயப்படுகிறார்கள். அப்படி பயப்படும்படி ஒன்றும் இல்லையானாலும்.

இப்பத்தான் ஒரு மாசமா நாங்க சந்திச்சிண்டிருக்கோம். எதுக்கு சந்திப்பு நேர்கிறதோ அதுவே எங்களுக்கு ஒரு முகூர்த்தம்.

நெருப்புக் கொட்டையைக் கீழேதேய்த்து சுட்டசுறீல், ஏதோ துளிர் விட்டமாதிரி ஆரம்பிச்சு இப்ப ஒரே தஹிதஹறிப்பு வெள்ளமும் புயலுமாக எங்களை அடித்துக் கொண்டு போகிறது. தடுக்க முடியுமென்று தோன்றவில்லை. வயசுக் கோளாறோடு சேர்ந்த காதவின் தன்மையே இதுதானா?

ஏதோ முடிந்தவரை படிப்பை முடித்துவிட்டு வேலைக்குத் தேடி அலைந்துவிட்டு நான், வீட்டுக்குச் சுமை, எனக்குச் சுமை, ஒரு ஒஜோசி. பொழுதுபோகாத இளைஞன்.

அவள் எங்கள் போஸ்ட்மாஸ்டர் வீட்டிற்கு வந்திருக்கிறாள். சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள் அம்மா அப்பா டில்லியில் இருக்கிறார்களாம். கோடை விடுமுன்றயைத் தன் சிநேகிதி போஸ்ட்மாஸ்டரின் மகளோடு கழிக்க வத்திருக்கிறாள். மராத்தியாம். ஆனால் தமிழ் நன்றாகப் பேசுகிறாள்.

இதோ பாரு பாட்டி! தங்க எடை போட்டுப் பார்த்தால் அவளை அழகென்று சொல்ல முடியாது. நிறம்கூட மட்டுத்தான். ஆனால் முகத்துல, நடமாட்டங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/341&oldid=1497822" இலிருந்து மீள்விக்கப்பட்டது