துளசி 299
கொள்கிறாளாம். பாட்டி நீ சொல்லுவையாம் 'கூந்தல் உள்ள சீமாட்டி கொண்டையாக போட்டுக்கொள்ளலாம். வெறுமனே வாரி முடிச்சுக்கலாம். பின்னித் தொங்க விட்டுக்கலாம். இல்லை வெறுமனே அருவியாக அவிழ்த்துவிடலாம். அவள் குரல் அப்படித்தானிருந்தது. எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனால் நெஞ்சு ஏதேதோ மொட்டுக் கட்டி பூத்து உதிர்ந்தது. மணம் கமழ்ந்தது. யமுனாபாயின் குரலுக்கு அந்த சக்தி இருந்தது.
இப்போது ஒன்று தெரிகிறது. கீதம் என்பது பாடுபவனுக்கு மட்டும் சொந்தமில்லை. பாடாதவனிடத்திலும் இருக்கிறது. அத்தனை ஜீவராசிகளிடமும் இருக்கிறது. நான் சொல்லும் கீதம் சங்கீதமே அல்ல. அது முழுநிலவு. அமாவாசை, உயிருள்ளது உயிரற்றது. இடம், காலம் பேதம் இவைகளின் எல்லைகளற்று எல்லாவற்றையும் பிணைக்கும் தொப்புள் கொடி ஆதலால் அவள்மேல் காதலாகினேன். இந்ந நிலை தவிர்க்க முடியாதது. இது முதல் காதல். இதனுடைய கவித்துவமே அதன் ஊசிக் காதில் புகுந்துபுறப்படுவதுதான். இதைப்பற்றிப் பேசுகையில் நினைக்கையில் அதில் அவள் கூட இல்லை. அதைப் பற்றிப் பேசுகையில் என் பாஷையே மாறிப்போச்சு.
ஒரு மாலை அவள் சொன்னாள். "நான் இன்னும் பத்துநாளில் இங்கு விட்டு கிளம்பிவிடுவேன். எனக்கு Bore ஆயிடுச்சு”, எனக்கு வயிற்றைச் சுருட்டிற்று. ஆகவே பத்து நாளில் இந்தக் கனவிலிருந்து விழித்துவிடுவேனா?
அவள் தொடர்ந்தாள் ஹாஸ்டலும் போர்தான். திருப்பித் திருப்பி செய்ததையே செய்துகிட்டு. ஆனா நான் அநேகமா டில்லிக்குத் திரும்பிடுவேன். எனக்குக் கல்யாணம் முடிச்சிருக்காங்க!”
"இதுவரை சொல்லவில்லையே கங்ராஜுலேஷன்ஸ்.”