300 லா. ச. ராமாமிருதம்
இதுதானா உன் பதில்?”
"..............................."
"இதுவரை நான் உன்னைப் புரிஞ்சுண்ட வரையில் நிஜம்மா சொல்லு நீ என்னை வாழ்த்தறயா?”
உன் முகம் என்னை நெருங்குகையில் உன் வங்கி வங்கி கூந்தலின் நடுவகிடு சீறிற்று.
உன் விழிகள் கணகனத்தன. அந்தத் தணலை என்னால் பொறுக்க முடியவில்லை.
தலை குனிந்தேன். 'என்னைவிட நீ அஞ்சு வயசு பெரியவள்' சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்த எண்ணம், இப்போது மின் பூச்சி பறப்பானேன்? ' 'Mr. கண்ணன், நீங்க என்னோடு வந்துடிறீங்களா? கவலைப்படாதே! நீங்க ஒரு இடத்தில் நிலைக்கும் வரை உங்களை நான் சாளிக்க முடியும். நமக்கு நாம்தான் முக்கியம்." என் கையை அவள் கை பொத்திற்று. அவள் கையில் ஜூரம் தகித்தது.
'ஒரு பெண் வெட்கம்விட்டு ஒரு ஆண் பிள்ளையைக் கையைப் பிடித்து இழுக்கிறாள் என்று நீங்க நெனைச்சிங்கன்னா நான் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த அத்தனையும் பொய்யாகிவிடும், பொய்யே துரோகம்தான். சரி நாளைக்கு பதில் சொல்லுங்க."
விர்ரென்று போய்விட்டாள். இருட்டிவிட்டது. மின்மினிகள் மினுக்க ஆரம்பித்து விட்டன. பாட்டி நீதான் வழி காட்டனும். பாட்டி உனக்கு நேராததில்லை. உனக்குத் தெரியாததில்லை. நீ சமுத்திரம்.
ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரம் உதிர்ந்தது.
பாட்டி புரிஞ்சுண்டுட்டேன்.