இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
துளசி 301
அடுத்த நாள் அவள் வரவில்லை.
அதற்கடுத்த நாளும் வரவில்லை.
வரவேயில்லை.
என் பதிலுக்குத் தேவை ஏற்படவேயில்லை.
அவளுக்கே-அவள் கேள்விக்குப் பதில் அவளிடமே கிடைத்துவிட்டதோ என்னவோ?,
‘'நீ எரிமலையிலிருந்து தப்பித்தாய்’ அதுதானே பாட்டி நீ தெரிவித்தது.
ரெண்டு துளசி பறித்து வாயில் போட்டுக் கொண்டேன்.
என்ன ருசி!
என்ன நெடி!
என்ன மணம்!
என்ன பாஷை!
பாட்டி நீ ஒளஷதம்.
பாட்டி நீ ரகை.