பக்கம்:அவள்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம்


 வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்.

இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி, கோட்டையைப் பிடித்து ராஜகுமாரியைப் பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான் அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள் முன்னதாகவே வந்து நடத்திவைத்த முகூர்த்தத்தில் மணந்து கொண்டவர்கள்தாம். ஆகையால் இறுதி செய்யாத செயலையோ, நம்பாத விஷயங்களையோ தேடி அலைய வேண்டாம்.

நான் ...

முதலில் என்னைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

வாழ்க்கையில் என் லக்ஷியம் என்னவென்றால்—ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.

எனக்குக் கால்நடையாய் ஊர்களைச் சுற்ற வேண்டுமென்று ஆசை. மூட்டையில்லாமல், முடிச்சில்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/354&oldid=1497896" இலிருந்து மீள்விக்கப்பட்டது