பக்கம்:அவள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம் 325

புலி புலி விளையாடப்போய் புலிய புலியே வந்தாச்சு.

நாங்கள் போய்ச் சேரும்வரை இருப்பாளா? அவளைத் தான் காண்போமா, அவள் உடலைக் காண்போமா?

வண்டியில் போகையில் கண்முன், மாலை கண்ட பிராமணப் பிணக்கோலம் மறுபடி சேன்றது. இவ்வேளைக்கு அது சிதையில் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கும்.

அட மடயா, வாழ்க்கையோடு என்ன பரீக்ஷை? எந்த நிமிஷத்தில் எங்கேயென்று சாவு காத்துக்கொண்டிருக் கிறது விதி, வினையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நீ அவளை அவள் வீட்டிற்கு அனுப்பாமலிருந்தால், பாம்பு கடித்திருக்குமா? -

ஏன் எங்கள் செயல்களெல்லாம் அர்த்தமற்று இருக்கின்றன?

வண்டியை விட்டிறங்கினோம். அவள் வீட்டிலிருந்து யாராவது வந்திருந்தாலும் வந்திருக்கலாம். குனிந்த தலை நிமிர மறுத்தது.

என்மேல் ஒரு பிடி விழுந்தது. அவளே தான். என்னை இறுகக் கட்டிக்கொண்டு கதறினாள். எங்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டதுகூட எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இங்கில்லை.

மாமனார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 'என்னய்யா சுத்த மடையன் மாதிரி வேலை செய்திருக்கிறீர்? என் குழந்தை தவித்த தவிப்பு எனக்கல்லோ தெரியும்!"

'இதென்னா இது? எனக்கு ஒன்றுமே புரியல்வியே!” என்றாள் அம்மா. பாவம் அவளுக்கு கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/369&oldid=1497921" இலிருந்து மீள்விக்கப்பட்டது