பக்கம்:அவள்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326லா. ச. ராமாமிருதம்



'என்னவா?- இதோ பாரும் உங்கள் பிள்ளை சமர்த்தை!' என்று தந்தியை அம்மா முகத்தெதிரே ஆட்டினார். இரவெல்லாம் அழுது அழுது என் குழந்தை முகமெல்லாம் வீங்கிவிட்டது. அவள் பட்ட அவஸ்தையைப் பார்த்தால் ஏரோப்ளேன் இருந்தால்கூடப் புறப்பட்டு விடலாம்போல உடம்பு பரபரத்தது. இருந்தும் காலையில்தான் வண்டி உங்கள் பிள்ளை கல் மாதிரி உடம்பை வைத்துக்கொண்டு ஸ்வாசமிழுத்துக் கொண்டிருக்கிறதென்று தந்தி அடித்தால் நன்றாயிருக்கிறதா? இவர் என்ன சின்னக் குழந்தையா?”

"சரிதானப்பா ரொம்ப ரொம்ப குதிக்கிறேனே? எனக்கு மாத்திரம் பாம்பு கடித்ததா? தந்தி நீங்கள் தானே அடித்தீர்கள் மறந்துபோச்சா?”

மாமனார் பின்னடைந்தார்.

"எல்லாம் நீ படுத்தின பாடுதானே!"

அம்மா முகத்தில் அருவருப்புத் தட்டிற்று, என்னடா அம்பி? இந்தக் காலமே இப்படித்தானாடா?’ என்றாள்.

ஏன் எங்கள் செயல்கள் அர்த்தமற்றுவிடுகின்றன?

சின்னக் குழந்தைகளுக்குச் சொல்ல, அவர்கள் மழு முனதுடன் நம்பும் ராஜாராணிக் கதைபோல் எங்கள் வாழ்க்கை சிற்சில சமயங்களில் கடற்கரையில், சூரியனுடைய சப்தவர்ண ஜாலங்கள் மிளிர்ந்து, காற்றில் நடுநடுங்கும் அலை துரை போன்ற நலுங்கிய அழகு

துக்கம் அதிகமானாலும் பைத்தியம்தான். சந்தோஷம் மிஞ்சினாலும் பைத்தியந்தான். பித்து பிடித்தவனும் பையத்தியந்தான். இவர்களில் நாங்கள் எவர்?

கோடை முடிந்து மாரி வந்துவிட்டது,

அம்மா, யாரோ நாலுபேர் தீர்த்த யாத்திரை போகிறார்கள் என்று சேர்ந்து கிளம்பிவிட்டாள். போகும் இடத்துக்குப் புண்ணியம் தேட வேண்டும். சாவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/370&oldid=1497919" இலிருந்து மீள்விக்கப்பட்டது