தரிசனம் 345
துடைத்தேன். நரம்புகளில் மஞ்சள் படர்ந்துவிட்டது. இன்று காலைதான் இளசு கண்டு மயங்கி, இளசுக்காகவே வாங்கினது.
ஆமாம். நான் என்ன வாழ்ந்தேன்? முதன் முதலாய் என்னைக் கன்னிக்காதல் சுட்ட வாய்மையில், வீட்டை விட்டு ஒடி நடந்தே கன்யாகுமரியை அடைவேன் என்று நினைத்த மூர்க்கமெல்லாம் எங்கே போயிற்று? அறுபத்தி நான்காவது நாயனாராக ஆவதற்குப் பட்ட ஆசையெல்லாம் என்னவாயிற்று?
அப்பா காலமாகி, ஹேமா வந்து, ஒண்ணு, ரெண்டு--எண்ணிக்கோ-மூணு, நாலு, அஞ்சு-குடும்பம் பெருகி, வீடு குறுகி, அம்மா காலமாகி, (அவளுடன் போனது என்னென்னவோ) வீடு இரண்டாகி-குடும்பம் என்றால் எத்தனையோ சோதனைகள், மேடுபள்ளங்கள் (என் முகத்தில் கூடத்தான். முக்கியமாய் முகத்தில்) தலை நரைத்து, புருவம் நரைத்து ('சொட்டுக் காப்பி குடிச்சுக் குடிச்சே முடாக்குடி ஆயாச்சு. மாசக் கடைசியில் காப்பிப் பொடி உதைச்சால் வீடு ஒரே ரகளை! கட்டுப்படியும் ஆகல்லே. ஏன் உதைக்காது”); கரடிப் புருவங்களின் கீழ் விழிகள் அனற்பிழம்பு, (அதென்ன எப்போப் பார்த்தாலும் விறைப்பு முழி? நாட்டுப் பெண்ணாய் இந்த வீட்டுக்கு வந்தது மொதக் கொண்டு பாக்கறேன். ஒருநாள் கூட சுமுகம் கிடையாதா?’ பசி விழிகள்.
-இன்னமும் கன்யாகுமரியைக் காணப் போகிறேன்.
கடைசியில்-காத்திருந்த தவம் பவித்ததம்மா என்று சொல்லவா?
ஒரு நாள் நான் குடும்பமாய் மூட்டை முடிச்சுடன் (ஒரு ஸ்டெளவ், ஈயம் முழுக்க இலாத பாத்திரங்கள் இரண்டு. காப்பிப் பொடி, அஞ்சறைப் பெட்டி) ரயிலில்