பக்கம்:அவள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமலி 351

கோவிலுக்கடுத்தாற் போலேயே சொப்பாட்டம் வீடு. ஒரு சின்ன அறை, அதற்கேற்ற கூடம். இந்த இரண்டு கட்டைகளுக்குப் போதாதா?

அகிலா இரண்டாவது ஜாமத்தில் இருப்பாள். அவளுக்கு இப்போ கொஞ்சம் முடியல்லே. வயசாகல்லியா? இரண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அஞ்சுக்குள். உறவு விட்டுப் போகாமல் இருக்க அவளுக்கு அஞ்சு வயசிலேயே போட்ட முடிச்சு. சட்டம் இருந்தாலும் கிராமத்துள் எட்டாது.

ஆனால் புத்ர பாக்யம் இல்லை. விரதங்கள் முழிச்சதுதான் மிச்சம். யார்மேல் குத்தம்னு ஆராய விஞ்ஞானம் அந்த அளவுக்கு அப்போது வளரவில்லை. வளர்ந்திருந்தாலும் அதன் உதவியைத் தேடத் தோன்றியிருக்காது. நமக்கு ப்ராப்தி அவ்வளவுதான்; அகிலாண்டேசுவரியின் சித்தம், அதனால் நம் வசத்தில் என்ன இருக்கு?

உறவில் ஒரு பையனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டார்.

பின்னால் தனக்கு வாரிசாவிருப்பான் என்று வரித்த பையன், ஒருநாள், கிழங்காட்டம் பொன் கட்டிய அவருடைய ருத்ராக்ஷ கண்டியை எடுத்துக்கொண்டு ராவோடு ராவாய் மறைந்தவன், போனவன் போயே போனாண்டி ஆனபின் ஆத்திரப்பட்டு, அழுது ஒய்ந்தபின், அகிலா ஒருமுறை கைகொட்டிச் சிரித்துவிட்டு, இனி உங்களுக்கு நான் குழந்தை. எனக்கு நீங்கள் குழந்தை' என்று தேற்றினபோது, குருக்களுக்குப் புத்தி தெளிந்தது. ஆனால், இருந்த இடத்தில் தொடரப் பிடிக்கவில்லை. அன்று தென்னாட்டை உதறி வந்ததுதான், இங்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது.

வார்ப்புரு:கப்இந்தக் கோவில் பெரிசு ஒழிய, ரட்சணையும் போஷணையும் போதாது. இன்னமும்தான். வந்த புதிதில், முதன் முதலாக அம்பாளை ஆள் உயரத்துக்கு, கிழிசல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/395&oldid=1497770" இலிருந்து மீள்விக்கப்பட்டது