354லா. ச. ராமாமிருதம்
‘'தேவி, என்னை-எங்களை மன்னிச்சுடு'
"ஸ்ப்" கூம்பலில் உறைந்துபோன அவர் கைகளைப் பிரித்துவிட்டாள். அவளுடைய உடலின் உற்ற கறுப்பில் உள்ளங்கைகள் செந்தாமரை. வெள்ளை விழியோரங்களில் செந்நரம்புக் கொடி. உதடுகள் வெற்றிலைச் சிவப்பு. புருவ நடுவில் குங்குமம். நெற்றியில் சூர்யோதயம்.
"அப்பா, நான் பிறந்த வீட்டுக்கு வர ஆசைப் படறேன். என்ன முழிக்கறேள்? நான் உங்கள் வீட்டில் வந்து இருக்கப் போறேன். ஒருநாள்தான்' -சுட்டு விரலைக் காட்டினாள்.
வாயடைத்துப் போனார். உள்ளே சந்தோஷம், பயம் இரண்டும் சேர்ந்த குழப்பம்.
அப்பா, பொண்ணாப் பிறந்தால் பிறந்தாத்து ஆசை துப்புற விட்டுடாது.”
'பாண்டிய ராஜகுமாரி, நீ என்னை கேலி செய்கிறாய் ' க மலாம்பிகே, குழந்தே'ன்னு மூச்சுக்கு மூச்சு கூப்பிட்டது யார்?”
'அம்மா, என்னைக் கேட்கணுமா, என்னைக் கேட்காமலே என் வீட்டுக்கு நீ வந்து உட்கார முடியாதா?”
"வாய்ச்சொல் கெளரவம்னு ஒண்ணு இருக்கேப்பா! தவிர, நான் வெகுளி. என் கணவரின் எல்லையற்ற பொறுமையும் உங்களைப் போலோரின் எல்லையற்ற அன்பும் தான் நான் இந்த அளவுக்கு என் இஷ்டத்துக்கு வளரக் காரணம். பொறுமைக் கடல்னா அவர் தான். எனத் அது முற்றிலும் பொருந்தாது. நான் வெகுளி, இப்பவும் அவரைக் சேளாமல்தான் வந்திருக்கேன். அவர் தடுக்கவில்லை. உங்கள் விஷயத்தில் தடுக்கமாட்டார். என் குழந்தைகளிடம் எப்போதுதான். எப்படித்தான் நான் இருக்கிறது. அப்பா?”