பக்கம்:அவள்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமலி 355

அவள் குரல் நடுங்கிற்று. அப்பா, நீங்கள் எல்லோரும் தெய்வத்தை உங்கள் தன்மையில்தான் படைத்திருக்கிறீர்கள். எனக்கும் ஏக்கம் உண்டு. கண்ணிர் உண்டு. அவருக்கு அதெல்லாம் இல்லை. அவருக்கு உருவமே இல்லை.”

சிரித்தாள். 'வாங்கோ போகலாம்.'

குனிந்த தலை நிமிராமல், அகிலா கோலத்தில் முனைத்திருந்தாள். பெரிய தாமரை. அடுக்கடுக்கான இதழ்களின் சிக்கலான கோடுகள், விரல்களின் நுனியிலிருந்து கோலமாவு, தீர்மானமான வளைவுகளில் சொரிந்தது.

இந்த வயதிலும் அகிலா நிறம் குன்றவில்லை. அழகாயிருந்தாள். அது, கண்ணைப் பறிக்கும் ஒரு தினுசான வெளிறிச் சிவப்பு, வயதுக்கு மயிர் நரைக்கவில்லை. வங்கிக் கூந்தல், இன்று, எண்ணெய்ஸ்நானத்தில் சற்று புஸு புஸு. தாடைகளில், கழுத்தில் இப்பத்தான் சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறன. பட்டுப்புடவையிலிருந்தாள். வெள்ளிக்கிழமை அல்லவா!

கோலத்தின் வெளி ஓரங்கைைச் சரிபண்ணிவிட்டு பார்வை திரும்புகையில் பூவின் மையத்தில் இரண்டு பாதங்கள் நின்றிருக்கக் கண்டாள். கண்கள் மெதுவாய் மேனோக்க...

யாரிந்தப் பொண்ணு? எப்படிக் கோலத்துள் வந்தாள்?

"என் பாதங்களுக்கு அளவேடுத்த மாதிரியே இருக்கே அம்மா!'

அகிலாவின் விழிகள் வட்டங்களாயின. எனக்கு இவள் மேல் ஏன் கோவம் வரல்லே? வந்தவளின் கண்கள் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/399&oldid=1497745" இலிருந்து மீள்விக்கப்பட்டது