பக்கம்:அவள்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முத்தம் 369

அவனுக்குள் மிக்க சாமர்த்தியமாகவும் வேடிக்கையாகவும் பேசுவதாக எண்ணம். அண்ணாவின் 'றாமணாக்கள்' சரிப்படாமல்தான் அவனுக்குக் கலியாணமான சுருக்கிலேயே நான் ஹாஸ்டலில் இடம் பார்த்துவிட்டேன்.

அப்பாவும் தடுக்கவில்லை.

இப்போதெல்லாம் அப்பா எதற்குமே ஆக்ஷேபம் தெரிவிப்பதில்லை. இல்லை, தன் அபிப்பிராயமே தெரிவிப்பதில்லை.

எனக்குத் தோன்றுகிறது. நாளடைவில் அவர், அவரிடம் எங்களுக்கிருந்த 'அத்து' மட்டும் இருத்திக் கொண்டு மற்றபடி எங்கள் இடத்துக்கே விட்டுவிட்டார். அதனாலேயே எங்களுக்கு அவரிடம் அச்சம் அதிகரித்தது.

அண்ணாவுக்குக் கலியாணமான சில நாட்களுக்கெல்லாம் அப்பா எங்களைத் தன் அறைக்குக் கூப்பிட்டார்.

மன்னியையும் சேர்த்துத்தான்.

"Look here, Boys, உங்கள் தாயார் போன பின்னர் உங்களுக்கு மாற்றாந்தாய்க் கொடுமை நேர்ந்ததென்று உங்கள் வாயிலும், பிறர் வாயிலும் பட வேண்டாம் என்றே நான் மறுமணம் செய்துகொள்ளவில்லை நானே சமைத்துப் போட்டு, நானே உங்களை வளர்த்தேன். நான் செய்தது சரியா அல்லது சரியாக உங்களை வளர்த்தேனா என்று இப்போது ஆராய்வதில் அர்த்தமில்லை. நீங்கள் இருவருமே ஊன்றிக் கொண்டாகிவிட்டது. உங்கள் பொறுப்புகள் உங்களுடையது. என்னைக் கேட்காத ஆலோசனைகளை, புத்திமதிகளை நான் வழங்கமாட்டேன். இதைச் சொல்லவே அழைத்தேன். நீங்கள் போகலாம்."

அ.-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/413&oldid=1497253" இலிருந்து மீள்விக்கப்பட்டது