ஒரு முத்தம் 373
ஆனால், நான் மசிவதாயில்லை. ஏற்கெனவே மோசமான 'லெட்ஜர்’களை என் பங்குக்குப் போட்டிருக்கிறது. தவிர இன்று எனக்கு 'மூட் அவுட்.'
"என்ன பேச்சே காணோம்? The ‘Strong Silent'man.eh?”
நான் குனிந்து என் வேலையில் முனைந்தேன். ஆனால் ஒடவில்லை. பக்கங்களுக்கும் என் பார்வைக்கும் குறுக்கே ஏதேதோ நினைவு முகங்கள் மிதந்தன. பேச்சுக்கள் உட்செவியில் ஒலித்தன.
'ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த புண்ணியத்தைக் கட்டிப்பே.'
'ஹும், நன்றாயிருக்கிறதே மன்னி, உங்கள் பேச்சு. புண்ணியம் சம்பாதிக்கக் கட்டிக்கனுமா? அப்படித்தான் கலியாணங்களெல்லாம் நடக்கின்றனவா?”
"எண்ணெய் தேய்ச்சுண்டால் ஒரு பாடு. கூந்தலைக் கட்டையால் அடிச்சுத்தான் கசக்கணும்.'
"அம்பி சார், முளிச்சுக்கோங்க!"—யாரோ தோளைத் தட்டினார் (யார், அவள்தான்).
நிமிர்ந்தேன். காதளவு முரட்டு மீசை, மேட்டு விழிகள். ராணுவச் சீருடையில் புன்னகை புரிந்தார், உரமான, ஒழுக்கமான பல் வரிசை.
“Day–dreaming, young man?”
“Quite natural. You know, he is a bachelor.”
(எனக்காகப் பரிந்து பேசுகிறாளாம்.)
கஸ்டமர் வாய்விட்டுச் சிரித்தார். "understandable"
அவர் போன பின்னர்:
"என்ன, முறைச்சுப் பார்க்கறிங்க?"
"..............."