பக்கம்:அவள்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374 லா. ச. ராமாமிருதம்

'பேசமாட்டிங்க...ஆனால், பார்ப்பீங்க இல்லையா?” புன்னகை புரிந்தாள்.

அவள் உதடுகளின்மேல் என் பார்வை உரைந்தது. கீழுதடு சற்று தடிப்பு. ஆனாலும் சித்திரம் தீட்டினாற் போல் வாய், செக்கச் செவேல் 'பூ.'

(இதுவாயிருக்க்குமா Absurd, Idiot!)

அவள் கண்கள் கவலை கொண்டன. "என்ன லிப்ஸ்டிக் அளிஞ்சுட்டுதா?" பையை எடுத்து அதில் பதித்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டாள்.

"நிமிசத்துலே பயமுறுத்திட்டீங்களே! You maughty man!”

இனி இப்படியே பொழுதைப் போக்கிவிடுவாள். தெரிந்துவிட்டது.

தீபாவளி ஸ்வீட்ஸ் பெட்டிகள் இரண்டு மூன்று வத்தன.

"அம்பி ஒண்டிக்கட்டை.இத்தினியும் வெச்சுக்கிட்டு என்ன செய்யப் போறீங்க?"

“You are welcome” அவளிடம் கொடுத்தேன்.

"அதுக்காக ஒண்னுகூட வெச்சுக்கலியா? ஒண்ணு வெச்சுக்குங்க."

"எனக்குத் தேவையில்லை. ஆமா, நீங்க என்ன செய்யப்போறீங்க? உங்கள் பங்கு வேறே இருக்கு!"

வேண்டியவங்களுக்குக் கொடுப்பேன். நல்ல பேர் கட்டிப்பேன். வாங்கிக்க மனுசாளாயில்லே?" சட்டென முகம் சிடுத்துப் பெட்டிகளை என் பக்கம் தள்ளினாள். "இல்லே, வித்துடுவேன்."

சமாதானம் பண்ணி பெட்டிகளை அவளிடம் திணித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/418&oldid=1497272" இலிருந்து மீள்விக்கப்பட்டது