ஒரு முத்தம் 379
அடுத்த நிறுத்தத்தில் இறங்கி நடந்தேன். கால் போன வழி. இந்தப்பக்கம் வந்ததாக ஞாபகம் இல்லை. இடம் புதிதாக இருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், இடமே வெடுக்கெனத் தனியாகத் துண்டிக்கப்பட்டாற் போல் சந்தடியும் இரைச்சலும் சட்டென அடங்கி, ஏன் நிசப்தமே குடிகொண்ட ஒரு குறுஞ்சாலை பிறந்து வளர்ந்தது. மந்திரக்கோல் மஹிமை போலும், புயல் நடுவே அமைதி. சாலை நடுவே ஒழுங்கான இடைவெளிகளில் மரங்கள். இரு பக்கங்களிலும் மதில்களின் பின்னால் தோட்டங்கள், தோப்புக்கள் நடுவே தெரிந்தும் தெரியாததுமாய்ச் சின்னதும் பெரிதுமாய்ப் பங்களாக்கள், காட்டேஜ்கள் பதுங்கின. போஷ் ஏரியா போலும், இல்லை, பூராவே தனியார் சொத்தோ? வரலாமோ கூடாதோ? ஏதோ சைகையால்தான் இங்கு இழுக்கப்பட்டிருக்கிறேன். காலைக் கனவு தொடர்கிறதா? நப்பாசை.
அட, கல் பெஞ்ச் வேறேயா? அமர்கிறேன். அந்திக் காற்று சாமரம் ஆடி நெற்றி முத்தை ஒற்றுகிறது.
முத்தத்தின் மூச்சு.
என்ன சங்கடம்... இந்த முத்தம் நெஞ்சு முள்ளில் மாட்டிக்கொண்டு மாயமான் காட்டுகிறது; என்னைத் தன் பின் விளிக்கிறது. இங்கேதான் எங்கோ மாவும் தென்னையும் சூழ்ந்து இந்த சிலந்திக் கூட்டினுள் சிறையிருக்கிறாள்.
"என் ராஜகுமாரா: வா! வா!"
No, no, இது இந்தச் சமயத்தின் சொக்குப்பொடி. தெரிகிறது.
ஆனால், தொண்டையை அடைக்கிறது.
அந்தரத்தில் பூமி தன் அச்சில் யுகாந்த காலமாய்ச் சுழலும் தனிமையை உணர்ந்த திரண்ட சோகம். அதன் அத்தனை ஜீவராசிகளுக்கும் பங்காகும்போது நேரும்