பக்கம்:அவள்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382 லா. ச. ராமாமிருதம்

 என் கைப்பிடிக்க என்று வருவான் எனக் காத்திருக்கும் கன்னியின் கண்ணிர்த் துளி.

'பளிச்'சென நெஞ்சில் வெளிச்சம் ஏற்றிக்கொண்டது.

உள்ளே போய் ஒரு பேப்பரை எடுத்துக் கடிதம் எழுதினேன்.

வரிகள் வளர வளர கனம் லேசாயிற்று.

"மன்னிக்கு.”

நான் சம்மதம். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் என்ன சொன்னாலும், எது செய்தாலும் சரி,ஆனால் சுருக்க சுருக்க, வழி இப்பத்தான் தெரிந்தது. தெரிந்துகொண்டே இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/426&oldid=1497284" இலிருந்து மீள்விக்கப்பட்டது