பக்கம்:அவள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அலைகள் ஒய்வதில்லை 385

அலைகள் திரண்டு, சீறிச் சுழன்று, தம்மையே கடைந்துகொண்டு. நுரை கக்கிக்கொண்டு கரையில் வந்து மோதி அறைந்து, விரிந்து, குலைந்து மீள்கின்றன. இவைகளின் படையெடுப்பு ஓயாதது. சீற்றமும் தணியாதது. தோல்வியும் மாறாதது.

ஆனால் எப்பவும் அப்படியில்லை என்று ரோஷத்துடன் மறுப்பதுபோல், ஒரு பெரும் அலை, தாவித் துள்ளிக் கரையேறி, அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் பரவிற்று. இருவரும் அவசரமாய் எழுந்து அதன் நணைப்புக்கு எட்ட, ஒருவருக்கொருவர் சற்றுக் கிட்ட நகரும்படி ஆனபோது அவர்களிடையே சமயம் சற்றுத் தளர்ந்தது.

அவர்களைத் துரத்திய அலை மீள்கையில், தன் உடன், மணல் திட்டில் கொஞ்சம் சரித்துக்கொண்டு போயிற்று.

"எவனுமே தனித்தீவு அல்லன்.
தீவின் விளிம்பில் ஒருகட்டி மண் உதிர்ந்தாலும்
அந்த மட்டில் தீவின் முழுமை சிதைந்தது.
ஆகவே யாருக்காக ஆலயமணி அடிக்கிறது
என்று கேட்டு அனுப்பாதே.
உனக்காகவே முழங்குகிறது.'

"ஜான் டன்."

தனக்குத்தான் சொல்லிக்கொண்டாள்... ஆனால் அவர் காதுக்கு எட்டிவிட்டது. ஆச்சரியத்தில் அவர் முகம் மலர்ந்தது.

பேஷ், பரவாயில்லையே! என்ன படிச்சிருக்கே?"

பதில் இல்லை. இஷ்டமில்லை போலும்.

"உத்யோகம் பண்ணறியா?"

தலை அசைந்த விதத்திலிருந்து அது 'ஊமா' 'ஹுமா' நிச்சயமாய்த் தெரியவிலலை.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/429&oldid=1497296" இலிருந்து மீள்விக்கப்பட்டது