xxxxiii
"சனியனே, என்கிட்ட வராதே, தொலைந்து போ!"
பிடித்துத் தள்ளிய தள்ளலில், குழந்தை நாலடி எட்டப் போய் விழுகிறாள். அவளை அப்படி என்ன கோபம் செய்தாள்?
பாப்பா அழுதுகொண்டே எழுந்து அவளிடம் போகிறாள்.
'அம்மா அ-ம்-மா ஆ-ஆ-ஆ!
வீட்டுக்கு வீடு இந்தக் காக்ஷி இல்லாத இடமே இல்லை. உலகம் பூராவே சொல்வேன். ஆனால் இதிலுள்ள கவிநயம் கண்டு, நின்று யோசித்தீரோ?
அடித்தாலும் நீதான்.
காலாந்த காலம், கற்பாந்த காலம் இந்த உண்மை, குழந்தைக்கு எப்படித் தெரிந்திருக்கிறது! அதுதான் தாய்ப்பால் ஊட்டிய உபதேசம்.
அந்த ஆச்சர்யம், அற்புதம், கவித்வம், சோகம், அழகு ரகஸ்யம், வெளிச்சம் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னை அமுக்குகையில், விழிகள் பெருகுகின்றன. கூடவே உள்ளூர ஏதோ ஆனந்தம் பொங்குகிறது. சிரிக்கிறேன்.
அடித்தது
அழுதது
தேறுவது
எல்லாம்
அவள்.
லா.ச. ராமாமிருதம்
Plat 242, கதவு எண் 1, கிருஷ்ணன் தெரு,
ஞானமூர்த்தி நகர், அம்பத்தூர்.
சென்னை-600 053,