390 லா. ச. ராமாமிருதம்
பிரகாசித்தது. நேற்றுபோல் அத்தனை வற்றலாய்த் தெரியவில்லை, இன்றைய உற்சாகமே சதைப்பற்றைத் தந்ததோ? ஆனால் வற்றல்தான்.
துல்லியமாய்க் கழுவிய கிளாசில் ஊற்றிய பானம் போல், நெஞ்சில் ஏதோ விளிம்பு உயர்வது உணர்ந்தார். இதற்கும் அவளுக்கும் கூட சம்பந்தமில்லை. இன்று நான் நிறைந்திருக்கிறேன். ஐயாம் ஹேப்பி.
'நேற்று நான் உங்களிடம் சரியாயில்லை. கனிந்த பேரீச்சம்பழ விழிகள்.
"ஒகே, இட் இஸ் ஆல் ரைட் மனசு எப்பவும் ஒரே மாதிரியிருக்கா?”
"அப்படியில்லீங்க. நேற்று என் மனது என் வசத்திலேயே இல்லை."
“அனாவசியமா நான் ஏதும் தெரிஞ்சுக்க விரும்பவில்லை.”
"அப்படியில்வீங்க. நீங்க நேற்று இங்கே வந்து இருந்ததுக்கு தாங்க் பண்னவே இன்னிக்கு வந்தேன்."
"நான் வருவேன்னு உனக்கு நிச்சயமா?"
"அப்படித் தோணிச்சு. நம்பிக்கைதான்."
அவருக்கு மனம் குளிர்ந்தது.
"நேற்று நான் மூட் அவுட், நேத்தி மாதிரி எனக்கு வருசத்துக்கு ஒருமுறை. இல்லை ஆறு மாசத்துலே அடுத்தடுத்து இல்லை, எப்போன்னே தெரியாது வரும். நேத்திக்கு ரொம்ப மோசம்.
"காரணம்?"
"பத்து வருடங்களுக்கு முன், என் வீட்டுக்காரர் இதே இடத்தில், கண்ணெதிரே தண்ணிலே மூழ்கிப்போனார்."