398 லா, ச. ராமாமிருதம்
ஒம் புவனேஸ்வரியே நம:
இதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக்கவோ, மலர்களைத் தூவவோ—ஊஹாம். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணிநேரம் தொர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.
ஓம் மாத்ரே நம:
ஆரம்பமே அம்மா.
ஆனால் இன்று— இடறி இடறி, நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை.
ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு.
அவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டது போல-முகம் காட்டவில்லை—தலையின் பின்புறம்—அதையும் ஸ்துாலமாகக் காண்பதென்பது அத்தனை சுலப சாத்தியமா? சிரமமாகக்கூடச் சாத்தியமா? முதலில்—சாத்தியமா?
✽✽✽
பிரமை? ஒப்புக் கொள்கிறேன், பிளட் பிரஷர்? இது வரை இல்லை. “ஹம்பக். புரளி, காதில் பூ சுத்தறே.” வாயடைத்து விடுகிறது. தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன்? ஃபான்டஸி இருக்கலாம். ரொமாண்டிக் இமாஜினேஷன்? மறுக்கப் போவதில்லை. அதற்கு வயது உண்டா?