இந்திரா 401
“இந்திரா, This is the famous லா.ச.ரா.”
வந்த கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன். முதலில், அப்போது நான் famous இல்லை. ('இப்போ மட்டும்?' என்று கேட்டுவிடாதீர்கள். மேலே சொல்லனும்) இரண்டாவது, இதுபோன்ற அறிமுகம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அவன் படும் பெருமையை, சந்தோஷத்தைக் கெடுக்க முடியுமா?
இருவரும் அவர்கள் குல முறையில், காலில் விழுந்து, ஐந்து முறை கும்பிட்டுக் கும்பிட்டு, 'சேவித்தனர்.
இந்திரா—இட்ட பெயரா, அழைக்கும் பெயரா, இன்னமும் அறியேன். அவ்வளவு இளவயதில், அந்த 'ஐயங்கார் கட்டுக்கும் சுயமான துரு துருப்புக்கும்—'ரம்மியம' என்ற வட மொழிக்கு அதே ஓசை ருசி, பொருள் நளினத்துடன் நேர்த்தமிழ் தெரிந்தவர் சொல்லுங்களேன்!
அறிவுபூர்வமாக சம்பாஷிக்கத் தெரிந்து, மரியாதையும் தெரிந்து, பெண்மையின் பிகு குறையாமல், இன்முகம். பண்பு, உபசரிப்பும் கூடிவிட்டால்,—அதெல்லாம் புண்ணிய சமாச்சாரம், எல்லாருடைய அதிர்ஷ்டமல்ல.
அவள் என் கதைகளைப் படித்தவள் அல்லள். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை.
நான் சாப்பிடுவதற்கு இலை வாங்கச் சீனு போனான். போகும்போது எனக்கு ஜாடைகாட்டிவிட்டுப் போனான்.
'தக்குனுண்டு சாமிக்குத் துக்குனுண்டு நாமம்-ஒரு குட்டி அறைக்குள் ஒரு குஞ்சான் அறை. அவர்கள் ஆண்ட இடம் அவ்வளவுதான்—உள் அறையில் எட்டிப்
அ—26