இந்திரா 405
விட்டான். ஒரு அச்சுக் கூடம் சின்னதாக ஆரம்பித்தான். உத்தியோகம் அவனை விட்ட வேளை, அவனுடைய நல்ல காலத்தின் துவக்கமாக அமைந்துவிட்டது.
சீக்கிரமே வீடு கட்டி, குரோம்பேட்டைக்குப் போய் விட்டான். எங்கள் சந்திப்புக்கு வாய்ப்புக்களும் குறைந்து போயின. எப்போதேனும் ரயிலில் சந்தித்தால் உண்டு. எங்கள் தண்டவாளங்கள் மாறிவிட்டன. எங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் நேரமில்லை.
கண்ணில் படவில்லை, மனதிலும் படவில்லை.
நான் உத்தியோகத்தில் உழன்று மாற்றல் ஆகி, அங்கு உழன்று, முறையாக ஒய்வு பெற்றுச் சென்னைக்குத் திரும்பி ஆச்சு ஒன்பது வருடங்கள்.
நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கல்யாணப் பத்திரிகை வந்தது, ஒரு பத்திரிகை ஆபீஸிலிருந்து திருப்பப்பட்டு. வதுக்களின் பெயர்கள், அழைப்பவர் பெயர் எல்லாமே புதுக.
ஆனால் ஊன்றிப் படித்தபோது
என் சகோதரியும் லேட் எஸ். ஆர். ஸ்ரீனிவாஸனின் இரண்டாவது புத்திரியுமான செளபாக்கியவதி வேதாவை... .
எஸ். ஆர். ஸ்ரீனிவாஸன்? லேட்? என்னைவிடப் பத்து வயது இளையவன். என்ன அக்ரமம்! ஆனால் அவன் தானா?
கல்யாணம் மைலாப்பூரில். நான் அடைந்த நேரம், மத்தியானச் சாப்பாடு முடிந்து, வரவேற்புக்கு முன், சந்தடி சற்று ஒய்ந்த நேரம்.
நறுவலாக ஒரு ஸ்திரீ முப்பது வயதிருக்கலாம். எதிர்ப் பட்டாள்.