பக்கம்:அவள்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406 லா. ச. ராமாமிருதம்

"கல்யாணப் பெண்ணின் தாயாரைப் பார்க்க முடியுமா?"

"என்னோடு வாங்கோ.”

சாமான் அறைக்கெதிரில் முன்றானையை விரித்துப் படுத்திருந்த—

'அம்மா, உன்னைப் பார்க்க யாரோ மாமா வந்திருக்கார்."

—உருவம் எழுந்தது. பாவம், அசதி.

"யாரது? ஒ!"

முகம் அரவிந்தமாகும் அந்த அற்ப நேரத்துள் நிகழும் கற்ப காலத்துக்கு என்னிடம் வார்த்தை இல்லை.

அப்படியேதான் இருக்கிறாள்.

"என்னடி கீதா? லா. ச, ரா. வைத் தெரியல்லியா?"

அந்த சந்தோஷ நேரத்தில் ஸ்ரீனிவாசனைப் பற்றிய நினைவு தவிர்க்க முடியாது.

ஆனால் கல்யாண வீடு. கண்ணிர் சிந்தக்கூடாது.

கண்ணிர் பளபளக்கும் விழிகளில் சிரிப்புடன் கீதா:

"மாமா! நீங்கள் என் ஆண்டு நிறைவுக்குக் கொடுத்தேளே, பட்டுப் பாவாடை— பத்திரமா என் பெட்டி அடியில் இருக்கு.”

பூமி கிடு கிடு.

சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் விளக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/450&oldid=1497392" இலிருந்து மீள்விக்கப்பட்டது