பக்கம்:அவள்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்திரீ 411

அவள் உனைத் தொட நேர்ந்ததா? அவள் உன்னைத் தொட்டிருந்தால், நீ அவளுக்குக் கிட்டியிருந்தால்! சிந்திக்காமல் இருக்க முடியவில்லை—ராமகாதையே திசை திரும்பியிருக்கும்.

அல்லவா?

குளம்போசை என்னுள் கேட்கிறது. உயிர் துள்ளுகிறது. Heart attack?

ஹிந்தோளம், மால்கோஷ், மால்கவுன்ஸ், சந்த்ர ஹான்ஸ், ஸாரமதி—என்று கட்டான்களைக் காட்டி உதறும் ஒரே கோலத்தைக் கேட்டுக் கேட்டுச் செவி பொளிந்துவிட்டது. ஆனால் நீ ராக ரத்ன மாலிகா.

My immortal wound! என் ஜுரமே!

பிதற்றல், பேத்தல்—இத்தனையும் ஜன்னி, அப்படித் தானே!

ஜன்னியில்லாமல், காவியங்கள் உண்டாகியிருக்க முடியாது.

லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலகரி, சியாமளா தண்டகம், மேக சந்தேசம், அபிராமி அந்தாதி, பராபரக் கண்ணி, பத்ரகிரிப் புலம்பல்—அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!

தேவி! என் பாவி!

Mysticism—காதலின் மஹோன்னத தத்துவத்தில் காதற் பொருள்—அது மானாயிருந்தாலென்ன, மனிதையாயிருந்தால் என்ன?

MY dark Gazelle of the Night!

சிந்தா நதியில் தட்டிய நிழல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/455&oldid=1497403" இலிருந்து மீள்விக்கப்பட்டது