பக்கம்:அவள்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோனாம்பரி


 த்தனையோ இடையூறுகளினூடே, வாரம் ஒரு நாள் மோனத்தில்—என் போதாத முயற்சியிலும், சுவாரஸ்யமான அம்சங்கள் சில வெளிப்படுகின்றன.

முதலில், பேச்சு எத்தனையோ விஷயங்களில்—ஒரு தலையசைப்பு, ஒரு விழி அசைப்பு, ஒரு நெற்றிச் சுருக்கத்தில் போகும் சமயங்கள்—-தேவையே இல்லை எனத் தெரிகிறது. பேசப் பேச, விஷயம் நீர்த்துப் போகப் போக, பேச்சுக்கென்றே பேச்சு என ஒரு விரலமான இரைச்சல்தான் மிச்சம். உண்மையில் பேசவேதான் அப்படி என்ன விஷயம் இருக்கிறது? சிந்தித்துப் பார்க்கில் சந்தேகமாகத்தான் இருக்கிறது. அது அது அதனதன் அளவில் எனும் ஆரோக்கிய விதியில் பேச்சு எப்பவுமே பத்தியத்தில் இருப்பது நலம் என்றே தோன்றுகிறது.

மோனம் ஒரு இயற்கையான நிலை என்று ரமண வாக்கியமாகப் படித்த ஞாபகம். நாக்கும் வாயும் படைத்து, சுற்றி என்னைப் போல் மக்களையும் படைத்து, பேச்சையும் படைத்து, பேசாதே என்றால் யார் கேட்பர்?

ஆனால், பேச்சு அடங்கி, வாய்க்கு ஒய்வு கூடுகையில், முகத்தில் அமைதியில், ஒரு சிற்பியின் செதுக்கல் நேர்த்தியே ஏற்படுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/456&oldid=1497405" இலிருந்து மீள்விக்கப்பட்டது