பக்கம்:அவள்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோனாம்பரி 413

மோனம் ஊற ஊறப் பேச்சில் மணம் குறைகிறது. உண்மையிலேயே பேச என்ன இருக்கிறது?

சில நாட்களாகவே, இரண்டு செம்பருத்திச் செடிகளும், வெறி பிடித்தாற்போல, பூத்துத் தள்ளுகின்றன.

ரோஜாவுக்கு எங்கே போவேன்? -

இந்தச் செடிகளையும் நான் நடவில்லை.

இந்த வீட்டில் நான் கால் வைத்தபோது, இவைதாம் செஞ்சிரிப்புடன் என்னை வரவேற்றன.

பக்கத்து வீட்டுத் தோட்டத்திலிருந்து, இவ் வீட்டு ஜன்னல் வழி, ஜாதி மல்லி மணம் பந்தலினின்று மயக்கம் தரும் வேகத்தில் மோதுகிறது.

சொந்தம் கொண்டாடி யாரும் இந்த மணத்தை, இங்கிருந்து பெயர்த்துக்கொண்டு போக முடியாது.

முகராதே என என் மூக்கையும் பிடிக்க முடியாது.

மல்லி சிரிக்கிறது—

நான் மணப்பது உனக்காகவும் இல்லை, என்னைச் சொந்தம் கொண்டாடும் அவனுக்காகவும் இல்லை.

எனக்காகவும் இல்லை.

பின் எதற்காக?

அதுதான் மோனே ஆச்சர்யம்

அடுத்து—

துரதிருஷ்டிக் குழாயின் மறு நுனியிலிருந்து பார்ப்பது போலும், சில சமயங்களில் சுற்றியிருப்பவையெல்லாம், சுற்றத்தார் அடங்க, எல்லாமே எட்ட எடட—ஆம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/457&oldid=1497411" இலிருந்து மீள்விக்கப்பட்டது