லூசி 423
எவ்வளோ உண்மையிருக்கிறது. சந்தோஷத்துக்குத்தான் வாழ்க்கை. பிரசினைகள் வந்தால் அந்தந்த சமயத்துக்கு ஏற்றபடி நடந்துட்டுப் போறோம். அதுவும் adjust ஆகி விடும். இதுதான் என் தத்துவம்.”
"மது நீ மாறவில்லை. இதுதான் என் கேள்விக்குப் பதிலா?”
"ஆமாம். ஆனால், உங்களுக்கு இன்னும் வெளிச்சமா வேனுமானால் சொல்றேன். நாங்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை. லோகரீதியில், பாபத்தில் வாழ்கிறோம். அதற்காக நாங்கள் பச்சாத்தாபப்படவில்லை. சந்தோஷமாகவேயிருக்கிறோம்."
ஒரு புழுதிக் காற்று எழும்பிற்று. தோட்டத்தில் புழுதியில்லை. வேப்பமரத்தினின்று பூக்கள் அடையாய் அவர்கள் மேல் சொரிந்து, தலையில், உடம்பில் அங்குமிங்குமாய் ஒட்டிக்கொண்டன.
ஒரு மோனம் தன்மேல் இறங்குவது உணர்ந்தார்.
நான் அறிந்து கொள்கிறேன்.
தெரிந்து கொள்கிறேன்.
புரிந்து கொள்கிறேன்.
நான் ஏதும் சொல்லத் தேவையில்லை. சொல்ல என்னிடம் ஏதும் இல்லை.
சாக்ஷியாய் நிற்கிறேன்.
"இப்படி நாங்கள் இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம்.”
அவர் கண்கள் நொந்தன. "குதிரை கதையாயிருக்கிறது. பழி வேறேயா?”
"உங்களைக் குற்றம் சொல்லவில்லை அப்பா. என் பெற்றோரின் சம்மதம் பற்றி நான் கவலைப்படவில்லை.