லூசி 427
உங்களிடம் சொல்லி உங்கள் சம்மதத்தைப் பெற ஆறு வருடங்கள் காத்திருந்தோம். இடையில் எங்களிடையில் எந்த தப்பும் நேரவில்லை. நாங்கள் சொல்லத்தான் முடியும். நம்புவது உங்களிஷ்டம். அவளைப் பற்றி நான் உங்களிடம் பிரஸ்தாபித்ததுமே, உங்கள் கோபத்தைக் கண்டதுமே, எங்களுக்கு வரம் கிடைக்காதென்று தெரிந்துவிட்டது. அவளிடம் சொன்னதும், மது, என்னால் இனி பிரிந்திருக்க முடியாது. அவர் ஆசி கிடைக்கிற போதுதான்.' பிறகு துணிந்து விட்டோம். அதைத் துணிச்சல் என்று கூட சொல்ல முடியாது. வெகு இயல் பாய்த் தொடர்ந்த அடுத்த கட்டம், பத்து வருடங்கள் ஆச்சு. இப்பவும் சொல்கிறேன். 'தீயினுள் விரலை வைத்து விட்டேன் நந்தலாலா,' அதுதான் அது. நாங்கள் மீளமுடியாது. மீள விரும்பவில்லை.
இன்னமும் சொல்கிறேன். தன்மையில் அவள் ஆணா, பெண்ணா என்றுகூட என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. அவளிடம் எதிர்பாராத சில அசாத்ய பரிவுகள், பணிவுகள், துணிச்சல்கள், எதிர்மாறுகள், மூர்க்கங்கள், சமயங்கள் இருக்கின்றன. சரி, நீங்கள் என்னையே கறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் உடம்புக்கு என்ன?”
"மது மூணு மாதங்களுக்கு முன் ஒரு நாள், நடுப்பகலில் திடீரென்று மழையிருட்டு கண்டது. மொட்டை மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை, உடனே எடுத்துவரக் கத்தினேன். எல்லாரும் என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தனர். அடுத்த கணமே எனக்குள் தெரிந்துவிட்டது. உச்சி வெயில் பட்டை வீறிக் கொண்டிருந்தது.
போன மாதம், அதே மாதிரி இன்னொரு அசடு நிகழ்ந்தது. மொட்டை மாடியிலிருந்து வடாத்தைத் துணியோடு தூக்கி வரச் சொன்னேன். 'அப்பாவைப்