லூசி 429
"சரியாப் போச்சு." மது வாய்விட்டுச் சிரித்தான். "உங்கள் உடம்பைப் பற்றி அறிந்து வர விரட்டினதே அவள்தான். 'அப்பா சரியில்லை, அவருக்கு உடம்புக்கு என்னவோ' என்று என்னைக் கசக்கிப் பிழிந்துவிட்டாள். அப்பா,அவளுடைய antanaeaவுக்கு tremendous pick up. அவளைப் பற்றி ஆச்சரியப்படுவதையே நான் விட்டு விட்டேன்."
அவன் போன பின்பும், அவர் அங்கேயே உட்கார்ந் திருந்தார்.
தெரிந்த முகங்கள், மறந்த முகங்கள் என ஒன்றொன்றாய்த் தோன்றி ஒன்றோடொன்று குழைந்து, கனத்து, நினைவோட்டத்தின் ஆழத்தில் அமிழ்ந்து போயின. தான் ஏதோ விளிம்பில் நின்றுகொண்டு, தன்னையே கவனிப்பது போன்றதொரு விரக்தி, தெளிவு. அற்புதமான அமைதி.
வானில் ஒற்றைப் பறவை
பறந்து சென்றது.
பத்திரமாய்க் கூடு போய்ச் சேர்
நெஞ்சு முகடுவரை மெத்து
மெத்தென ஆசி.
வான், ஒவ்வொரு நசக்ஷத்ரமாய்
விழிக்க ஆரம்பித்து விட்டது.
திரண்டு கொண்டிருக்கும் இருளில் மங்கலாய் உருவக் கோடு.
'கோமு.'
எலுமிச்சை இலைகள் சலசலத்து கம்மென்று மணம்.
இன்று வெள்ளிக்கிழமை.
ஒரு பெரிய நக்ஷத்ரம் வானில் உதயம், கற்கண்டுக்- கட்டி போல்
"உன்னிடம் மஞ்சள் சரடு இருக்கும்."