பக்கம்:அவள்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லூசி 431

தெய்வமென்றால் பயமாயிருக்கிறது. எண்ணம் கச்சா சரக்கு. அதிலிருந்து நாம் நூற்று, நெய்து, உயிர்த்த தெய்வத்துக்குப் பயப்படுகிறோம். ஆனால் அந்தத் தெய்வத்தை, அவளாகப் பார்க்கையில் தென்பாயிருக்கிறது, இது என்ன மர்மம்? அவள் மர்மமானவள், கவர்ச்சி உடையவள், அழகி, நித்ய கல்யாணி என்கிற எண்ணங்களிலேயே இஷ்ட ஸ்வரூபமாகி விடுகிறாள். ஆனால் இதுவும் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதுதானா? இந்த 'அவள்'தான் வாழ்க்கையின் ஸாதகம், சாதனையா?

"க்-றீ-ஈ-ஈ-ச்."

கதவு.

"யார்?"

"நான்தான் Father."

"ஓ!—"

உயரமாய் உடல்கட்டாய், துடிப்பாய், ஏதோ அமானுஷ்யமாய்—கட்டிலண்டை வந்து—

நின்றாள்.

"உன் பக்கத்தில்தான் ஸ்விட்ச். போடு."

போட்டாள். மின்சாரம் 'அம்பேல்'. இருள் இன்னும் அடர்த்தியாகச் சூழ்ந்து கொண்டது.

"மது?"

"தூங்குகிறார்.”

"என்ன விசேஷம், நீ மட்டும் தனியாய், இந்த வேளைக்கு?"

"உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு வந்திருக்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/475&oldid=1497685" இலிருந்து மீள்விக்கப்பட்டது