பக்கம்:அவள்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று, நேற்று, நாளை.


அவள்

ன்று—

காலை விழித்ததும், கீழிறங்கி பல் விளக்கி, முகமலம்பி பொட்டிட்டுக்கொண்டு முதற்காரியம் விளக்கையேற்றியதும், சுடரிலிருந்து ஒரு பொறி பறந்து வந்து வாயுள் புகுந்து, அதை அவள் உயிருடன் விழுங்கிவிட்டாற் போவிருந்தது. அது மார்புள் இறங்கிய இடமெல்லாம் பரபரத்து, இதயத்தில் தங்கிய இடம் அரித்தது.

இன்று—

சில சமயங்களில், ஒரு வாக்கியமோ, வார்த்தையோ பதமோ, அதன் வேளைக்குமுன் முளைத்துவிட்டதால், பொருள் விளங்காது, அதனாலேயே பொருள் அற்றதாய்த் தோன்றிக்கொண்டு, அதன் வேளை வருமளவும், வேளையில்லாத வேளைகளிலும் திடீர் திடீரென முளை தெரிந்து உடனே மறைந்து, நெஞ்சுக்குழியில் இடறி இடறி, ஏதோ பின்வரும் அதன் வேளையின் அடையாளமாய் விளையாடும். அதுபோல் அவள் விழுங்கிய பொறி இதயத்தில் தங்கிய தருணமே— "இன்று" என்ற பதம் பிறந்து அன்று பூராவும் அவளை அரிக்க ஆரம்பித்தது.

அ.-28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/477&oldid=1497688" இலிருந்து மீள்விக்கப்பட்டது