இன்று நேற்று நாளை 443
அவர் துரங்கமாட்டார். தூங்கினாலும் என் சக்தி தூங்க வொட்டாது. தீர்மானமாய், சந்தேகமறத் தெரியும்.
இந்த உணர்வுதானோ இன்று இன்று என்று இன்று காலையிலிருந்து என்னை நச்சரித்துக் கொண்டு திரண்டிருக்கும் 'இன்ற'ன் பொருள் விளக்கம்? இது என்னை, ஆட்கொண்டபின், நானே என்னிடத்தில் இல்லை. என் செய்கைகளை நானே கவனிக்கிறேன்.
இதோ விளக்கையும் பாலையும் வட்ட மேஜைமீது வைத்துவிட்டுத் திரும்புகிறேன்.
இருளில் எனக்காக விழிகள் காத்திருக்கின்றன. அவை என்னை விழுங்குகையில் நான் என்னை, என் முழுமனதுடன், உடனே முழு அவாவுடன், உடனே அடுத்து என்னை மறந்து, இழப்பது இதோ தெரிகின்றது. என் மார்த்துணி சரிகின்றது.
இன்று நான் என் மூன்றாம் ஸ்தனத்தை இழந்தேன்.
அன்று அவளுக்கு வெட்கம் கண்டது.
இன்று எனக்கு வெட்கம் விட்டது.
கால் தடுக்கி மெத்தையில் அவர் மேல் அப்படியே விழுகிறேன்!
இடைத்துணி நெகிழ்கின்றது. ஆயினும் எனக்கு. ஏன் முகம் கவிழவில்லை?
ஒருவரோடொருவர் பின்னிப்புரண்டு பிணைந்து இருவரும் ஒன்றாகி, அவ்வொன்றும் அன்று என்ற ஒன்றலில், மூச்சோடு மூச்சு கோர்த்து வாங்கும் மூச்சிறைப்பில் யார் மூச்சு யாருடையது? மூச்சுத்தானா, அல்லது பூமி தன் அச்சுப் பிசகிப்போச்சா? கண் திறந்திருப்பதற்கும் மூடியதற்கும் வேறு தெரியாமல் திகைக்கடித்து எங்கும் ஒன்றாய அவ்விருளில், இருள் தோற்றுவிக்கும் தோற்றங்களில் கண்ணுக்குள்,