பக்கம்:அவள்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444 லா. ச. ராமாமிருதம்


வெள்ளிமணிகளின் கிண்கிணி
மலரின் செங்குஹை
ஈரத் திரியில் நீலச்சுடர்ப் பொறி
மீனின் அடிவயிற்றின் ஒளிமருட்சி
எண்ணாயிரம் நட்சத்திரச் சொரி
—தெரிகின்றன.


அங்கத்தில் அங்கம் அழுந்தி, இரு கூறு ஒன்றோடொன்று பொருந்தி எப்படியேனும் ஒன்றாய், அந்த ஒன்றும் அன்று என இழைந்துவிடத் தவிக்கும் இப்பேரிணைப்பின் அவஸ்தையில், என்னதான் அழுந்தியும், என்னதான் இழைந்தும், இருகூறு இருகூறுதான் என்று உணர்ந்த பிளவின் ஏக்கம் நெஞ்சைப் பிளந்துகொண்டு எங்களிருவரிடமிருந்து ஒரே சமயத்தில் கிளம்பிய கேவலில், இன்று, நாளை, இரவு, பகல் என வேளையைக் கீறும் நினைவு தன் குமிழி வெடித்து என்னுள் புகுந்த உயிர் வெள்ளத்தில் நான் மூழ்கிப்போய், மூழ்கிக் கொண் டிருக்கையிலேயே எங்கள் இருகூறால்தான் இப்பேருறவு, இப்பேருறவால் இப்பேரிழைவின் இப்பெருவெள்ளம் என இத்தனையும் புரிந்துகொண்ட அத்தனையும் இவ் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகும் தருணத்தில் ஒன்று, தன் புதிர் விட்டு நெஞ்சில் பதிந்தது. இன்று இன்றாய் என்றிலிருந்தோ அன்றன்றாய் சேர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

இன்று

என்பது:

நானே தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/488&oldid=1497706" இலிருந்து மீள்விக்கப்பட்டது