பக்கம்:அவள்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று நேற்று நாளை 449

"உட்காரு மூச்சு வாங்கிக்கோ; மிச்சத்தை நான் செய்யறேன்"னா கோக்கமாட்டேன்கறா... அதெல்லாம் ஒண்ணுமில்லே அத்தே, சித்தே நேரத்தில் சரியாய்ப் போயிடும்"னு எனக்கு சவால் விடறான். தன்னை விட்டுக் கொடுத்துக்கக்கூடாதாம்! அதென்ன ரோசமோ? அப்படியேதான் இவளை உக்காத்திவெச்சு செய்ய எனக்குத்தான் உடம்பு லகுவா இருக்கா? மனமிருந்தாலாச்சா? உடம்பு ஒத்துழைக்க வேண்டாமா? நாளுக்கு நாள் உடம்பு ஊதற வேகம் பதினெட்டு முழம் போதல்லே. முறையா, பிராணன் மூக்காலோ காதாலோ கண்ணாலோ வாயாலோ பிரியாமல், ஒரு நாள் 'டொப்'புனு வெடிச்சுடுவேனோன்னு எனக்கே பயமாய் இருக்கு.

பொம்மனாட்டி கஷ்டம் புருஷாளுக்குத் தெரியறதா? அவாளுக்கு அஞ்சும் மூணும் அடுக்கா வேண்டியிருக்கு. வேளைக்கு ஒண்னு குறையப்படாது. அப்படியே குறைச்சுப் போட்டாலும் நமக்கும்தான் மனசு கேக்கறதா?

இதோ ஆச்சு நாள் கிட்டக்கிட்ட நெருங்கிடுத்து. வளைகாப்பும் சீமந்தமும் ஆச்சுன்னா, பிறந்த வீட்டுக்குப் போயிடுவாள். அப்புறம் என்ன பண்ணுவேன்! வேலைக்கு நான் பயப்படல்லே, போட்டதைச் சாப்பிடுவான் பிள்ளை; கவலையில்லை. அவருக்கும் இனி ராத்திரி மோருஞ்சாதமோ புழுங்கலரிசிக் கஞ்சியோதான்; மத்தவைதான் உடம்புக்கு ஒத்துக்கல்லியே!

பிறந்த வீடு, இதோ இதே தெருக்கோடிதான். ஆனாலும், பிரிவு கஷ்டமாயிருக்கு.

நேற்று மாதிரியிருக்கு—

பாவாடையும் சட்டையுமாய் வந்தாள். இப்போ வயிறும் பிள்ளையுமாப் போய், தையல் நாயகி புண்ணி

அ.—29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/493&oldid=1497723" இலிருந்து மீள்விக்கப்பட்டது