454லா. ச. ராமாமிருதம்
யிருந்து என் கைச் சட்டியைத் தொட்டுட்டா. அத்தைக்கு கனகோபம் வந்துடுத்து. அத்தைக்கு கோபம் வந்து, நான் இப்பத்தான் பார்த்தேன்.
'ஹத்து, திமிர் பிடிச்ச கழுதை ஒடு, இந்த இடத்தை விட்டு!"
புறங்கையால் வாயைத் துடைச்சுண்டு எழுந்தவள் திடீர்னு இடுப்பைப் பிடிச்சுண்டு உட்கார்ந்துட்டா.
"என்னடி, மாய்மாலம் பண்ணறே? நடையைக் கட்டறையா இல்லையா?”
ஆனால் குருவிக்காரிக்குக் காது கேக்கல்லே. அவளுக்கு இப்போ காது கேக்க முடியாது. முகம் தீடீர்னு வெளிறிட்டுப் போச்சு. முகத்தில் வேர்வை 'குப்குப்'புனு. கொப்புளிச்சு வழிஞ்சு பூமியில் சிந்ததது. இடுப்பிலே உடம்பு மத்தாய் கடையறது. நெற்றியிலே மயிர் வழிஞ்சு கண்ணைக் குத்தறது. முழி ரெண்டும் மேட்டுலே சொருகிப்போச்சு.
"ஐயோ! அம்மா!!"
எனக்கு ஒண்னும் புரியல்லே. ஆனால் அத்தைக்குப் புரிஞ்சுபோச்சு. கண் விரிஞ்சிபோச்சு. கன்னத்துச் சதையைக் கொத்தா ரெண்டு கையிலும் கெட்டியா பிடிச்சுண்டுட்டார்.
'அடிப் பாவி!'
"அட ராமா!!"
'குட்டி, ரேழி உள்ளை அவசரமா ஒழி!'
ஒழிக்கக்கூட நேரமில்லை. சாமான்களை அப்படி அப்படியே ஒரமாய் நகர்த்தி நடுவிலே இடம் பண்றதுக்குள்ளே, அத்தை குருவிக்காரியைத் தாங்கிண்டு உள்ளே வந்துட்டார், இடுப்பிலே ஒரு கை கொடுத்து அவள் கையைத் தன் கழுத்திலே சுத்திண்டு.